சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாமல் வந்தால் வாகனம் பறிமுதல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

செஞ்சி : முக கவசம் இன்றி வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எஸ்.பி., ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று செஞ்சி ஒன்றியம் கவரை கிராமத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் செஞ்சி நகரில் நான்கு முனை ரோட்டில் பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.அப்போது, கொரோனா இதுவரை இல்லாத மிக ஆபத்தான நோய். நீங்கள் வெளியே வந்து சென்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும்.வயதானவர்களை காப்பாற்றுவது கடினம். தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

முக கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. முக கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அடுத்து 5 நாட்களுக்கு வாகனங்களை போலீசார் ஒப்படைக்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்தார். முக கவசம் அணியாமல் கர்சிப் கட்டி வந்தவர்களை, முக கவசம் வாங்கி அணிய செய்து அனுப்பினார். டி.எஸ்.பி. ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர் சுப்பிரமணியன், துரைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X