போதை பொருட்கள் பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை பொருட்கள் பறிமுதல்

Added : ஜூன் 24, 2020
Share
பண்ருட்டி : பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இருவரை பண்ருட்டி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பண்ருட்டி - கடலுார் சாலையில் உள்ள ஒரு கடையில் பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் அம்பேத்கார்

பண்ருட்டி : பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இருவரை பண்ருட்டி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

பண்ருட்டி - கடலுார் சாலையில் உள்ள ஒரு கடையில் பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான 11220 பான்மசாலா, ஹான்ஸ் பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்கள் பண்ருட்டி, காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த சுஜாராம்,47; சம்பாராம்27; ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X