பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டம்! கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு... தீவிரமாக பணியாற்ற கலெக்டர் வேண்டுகோள்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள், தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், எஸ்.பி. ஜெயக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது; விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வரை 606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் இறந்த நிலையில், 391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாளொன்றிற்கு 1,200 பேருககு கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது.

இதில், 25 முதல் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகின்றது. இதனால், விழுப்புரம் நகரில் அதிதீவிர கட்டுப்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில் மூலமும், செங்கல்பட்டில் இருந்து திருச்சி செல்லும் ரயில் மூலமும் புதிய பயணிகள் விழுப்புரத்திற்கு வருகின்றனர். இவர்களை ரயில் நிலையத்தில் தீவிரமாக சோதனை செய்து, தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட், இறைச்சி மார்க்கெட் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும். அங்கிருந்து வாகனங்கள் வெளியேற தடை விதித்து, அத்தியாவசிய பொருட்களை வீடுகள் தேடி சென்று வழங்க வேண்டும். நகராட்சியில் உள்ள தெருக்களில் மூன்று வேளையும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இதில், எந்தவித புகாருக்கும் இடம் அளிக்கக்கூடாது. விழுப்புரம் நகரத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் 17 பேர் உள்ளனர். மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும். நகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் கை கழு தண்ணீர், சோப்புகள் வைக்கவேண்டும்.

மேலும், மாவட்டத்தில் கிரிக்கெட் மற்றும் கபடி, வாலிபால் உள்ளிட்டவை விளையாட தடை விதிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணம் செய்ய வேண்டும். அதிக பயணிகளை ஏற்றிச்சென்றால், டிரைவர் மற்றும் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். 50 சதவீத பஸ்களை தவிர்த்து கூடுதலாக பஸ்களை இயக்கக்கூடாது.மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொேரானா பரவலை கட்டுப்படுத்த பணியாளர்கள் புத்துணர்ச்சியுடன் பணியாற்ற வேண்டும்.

தனியார் மருத்துவமனையில் அரசு விதிமுறைகளை பின்பற்ற ஆலோசனை வழங்க வேண்டும். சுகாதாரத்துறை அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். குறிப்பாக, கொரோனா பாதிப்பு தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்காஸ்ட்ரோ, டி.எஸ்.பி., நல்லசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X