சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்பேத்கர் படத்தை மூவர் கைது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே அம்பேத்கர் உருவ படத்தை சேதப்படுத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த இருசாளக்குப்பம் காலனியில், விருத்தாசலம் - ஆலடி சாலையோரம் அம்பேத்கர் உருவ படம் உள்ளது. இந்த உருவப் படத்தை, நேற்று முன்தினம் இரவு, அவ்வழியாக சென்ற மர்மநபர்கள் சிலர், சாணியால் அடித்து சேதப்படுத்தினர். இதையறிந்த அப்பகுதி மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.தகலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.

விசாரணையில் கச்சிராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ௧௭ வயதுடைய இரு சிறுவர்கள், சிவசங்கரமூர்த்தி, 22, ஆகியோர் அம்பேத்கர் உருவப்படத்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது.இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X