பழுதடைந்த பள்ளிக் கட்டடம் இடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த பள்ளிக் கட்டடம் இடிப்பு

Added : ஜூன் 24, 2020
Share

புவனகிரி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் பழுதடைந்த நிலையில் இருந்த கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர்த்திட்டம், வட்டாரக்கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இதே இடத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும் செயல்பட்டு வந்தது.பள்ளிக்கட்டடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அவதிடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் முடிந்து சேர்மன் கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற நிலையில், பழுதடைந்த கட்டங்கள் குறித்து கணக்கெடுத்தனர்.

ஒன்றியத்தில் பல்வேறுப் பகுதிகளில் தொடக்க பள்ளிகள், அங்கன் வாடிக் கட்டம் மற்றும் சமையல் கூடம் என 18 கட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், ஒன்றிய பெருந்தலைவர் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் ஒப்புதலுடன் பழுதடைந்த கட்டடங்கள் இடித்து அகற்றும் பணிகள் துவங்கின. அதன்படி கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இடித்து அகற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X