சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மைனர் பெண் திருமணம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சி அருகே மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

செஞ்சி அருகே உள்ள பழவலம் கிராமத்தில் 16 வயது மைனர் பெண்ணுக்கும், அவரது உறவினருக்கும் இன்று காலை அதே ஊரில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சுமதி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகியோர், பழவலம் கிராமத்திற்கு சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டப்படி தவறு என சுட்டி காட்டினர்.

இதையடுத்து திருமணத்தை நிறுத்த பெற்றோர் ஒப்பு கொண்டனர். இன்று காலை விழுப்புரம் சமூக நலத்துறை அலுவலகத்தில் மைனர் பெண்ணை ஒப்படைப்பதாக பெற்றோர் உறுதியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X