சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் ஈடுபடும் 'குடிமகன்கள்' டாஸ்மாக் இடமாற்றம் செய்யப்படுமா?

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் அருகே சாலையோரம் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்கள், அவ்வழியாக செல்லும் பொது மக்களிடம் தகராறில் ஈடுபடுவதை தடுக்க, டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுார் அடுத்த கேப்பர்மலை பகுதியில் உள்ள எம்.புதுாரில் அரசு காச நோய் மருத்துவ மனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எம்.புதுார் வழியாகத்தான் கேப்பர்மலை மீதுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாகனங்களில் கடலுார், முதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.எம்.புதுார், கன்னிமா நகரில் சமீபத்தில், திறக்கப்பட்ட அரசு டாஸ்மாக் கடைக்கு, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடிமகன்கள் வந்து மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். பின்னர், அருகில் உள்ள காச நோய் மருத்துவமனை வளாகம் மற்றும் சாலையோரத்தில் அமர்ந்து குடிப்பதுடன், போதை தலைக்கு ஏறியதும், காலிப்பாட்டில்களை அங்கேயே உடைத்து வீசுகின்றனர்.

அவ்வழியாக வாகனங்களில் செல்லும் பொது மக்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், இரவு நேரத்தில் எம்.புதுார் வழியாக வாகனங்களில் செல்லும் உட்கிராம மக்கள், பெண்கள் மிகுந்த அச்சமடைகின்றனர்.எனவே, காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மது குடித்து, தகராறில் ஈடுபடும் குடிமகன்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X