சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவிலில் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் கார் ஸ்டேண்ட் அருகே உள்ள கோவிலுக்குள் புகுந்த நல்லப் பாம்பு மீட்கப்பட்டது.

கடலுார், உழவர் சந்தை அருகே கார் ஸ்டேண்ட் பகுதியில் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று காலை 10:30 மணியளவில் நல்ல பாம்பு புகுந்தது. இதனை பார்த்த கார் டிரைவர்கள் வனவிலங்கு ஆர்வலர் செல்லாவிற்கு தெரிவித்தனர்.இதனையடுத்து, அங்கு வந்த செல்லா, 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தார். பின், வனத்துறை உதவியுடன் பிடிப்பட்ட பாம்பை அரசு காப்புக் காட்டில் விட ஏற்பாடு செய்தார்.அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கார் ஸ்டேண்ட் முன் குவிந்ததால், திடீர் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X