சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தலைமை காவலருக்கு தொற்று

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக் காவலருக்கு தொற்று உறுதியானதால் காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக் காவலர், தனக்கு 2 நாட்களாக சளி, காய்ச்சல் இருந்ததால் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனையடுத்து, நீலமங்கலம் பகுதியில் வசித்து வந்த அவர் தனிமை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து, போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.பெண் காவலருக்கு தொற்று உறுதியானதால், போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மற்ற மாவட்டங்களில் போலீசார் யாருக்கேனும் தொற்று உறுதியானால், காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் கிருமி நாசினி மட்டுமே தெளிக்கப்பட்டது. போலீசாரும் காவல் நிலையத்தில் தொடர்ந்து அன்றாட பணிகளை அச்சத்துடன் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X