தமிழ்நாடு

தேவை! மாவட்ட நிர்வாகத்தின் தீவிர விசாரணை...பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 தேவை! மாவட்ட நிர்வாகத்தின் தீவிர விசாரணை...பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்

திட்டக்குடி தாலுகா, பெருமுளை கிராமத்தில் 2009ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சமத்துவபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டு, 2013--14ல் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்து, வீடுகட்ட பணி ஆணை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சமத்துவபுரத்திற்காக கையகப்படுத்திய இடத்திற்கு அருகே மனை இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றனர். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு பெற்றவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவிற்கான இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி, பட்டா பெற்றவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.போலி பட்டாஇந்நிலையில், பொது மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இடம் மற்றும் ஆவணங்களை 2018 ஜூன் மாதம் திட்டக்குடி தாசில்தார் சத்யன் ஆய்வு செய்தார். அதில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் பெரும்பான்மையானவை போலியானது.

தாலுகா அலுவலகத்தில் இருந்து காணாமல் போன முத்திரையைக் கொண்டு போலியாக பட்டா தயாரித்து மக்களுக்கு வழங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.இதுகுறித்து கலெக்டருக்கு, தாசில்தார் சத்யன் விரிவான அறிக்கையை அனுப்பினார். வருவாய்த்துறை விசாரணையில், பொது மக்களிடமிருந்து உரிய மனுக்கள் கூட பெறாமல் இடைத்தரகர்கள் மூலம் 20 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பெற்றுக் கொண்டு ஒரிஜினல் முத்திரை, போலி கையெழுத்துடன் கூடிய பட்டா வழங்கியது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கக் கோரி த.வா.க., மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலர் சுரேந்தர் தலைமையில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.கிடப்பில் போன திட்டம்தாசில்தார் சத்தியன் இடமாற்றத்திற்கு பிறகு இவ்விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் பெருமுளை கிராமத்தில் பட்டா வைத்துள்ள 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் பட்டா செல்லுமா, செல்லாதா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.காணாமல் போன தாசில்தார் முத்திரையும் இது வரை கண்டுபிடிக்க முடியாததால், தாசில்தாருக்கு புதிய முத்திரை வழங்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. காணாமல் போன முத்திரையைக் கொண்டு தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால் அதை கண்டுபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலிடம் கேட்டபோது, "மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து தகுதியுடைய பயனாளிகள் பட்டியலை சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் வட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்ளும்" என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X