சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தேடி வந்த மான் நாய்கள் கடித்து பலி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

தியாகதுருகம் : வரஞ்சரம் காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான், நாய்கள் கடித்ததால் இறந்தது.

தியாகதுருகம் அடுத்த வரஞ்சரம் கிராமத்தைச் சுற்றி காப்புக் காடு உள்ளது. இங்கு அதிக அளவில் மான்கள் வசிக்கின்றன. நேற்று காலை 7:00 மணிக்கு தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று காப்பு காட்டில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்தது. அப்போது அதனைச் சுற்றி வளைத்த தெரு நாய்கள் கடித்துக் குதறின. இதில், படுகாயமடைந்த மான் இறந்தது.தகவலறிந்து வந்த வனக்காப்பாளர் குப்புசாமி, இறந்த மானை மீட்டார். அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் செல்வராஜ் மானுக்கு பிரேத பரிசோதனை செய்த பின்னர் காப்புக்காட்டில் அதன் உடல் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X