வீணாகும் குடிநீர்: நடவடிக்கை தேவை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகும் குடிநீர்: நடவடிக்கை தேவை

Added : ஜூன் 24, 2020
Share

விருத்தாசலம் : சிதம்பரம் சாலையில் கடந்த 20 நாட்களாக சேதமடைந்துள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் கஸ்பா, பூதாமூர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பெரியார் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன், விருத்தாசலம் - கடலுார் சாலை, சிதம்பரம் சாலை பிரியும் இடத்தில், இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை, நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால், குடிநீர் விரயமாவதோடு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்துள்ள குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X