சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண மோசடி ஆசாமி குண்டர் சட்டத்தில் கைது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

தியாகதுருகம் : பொதுமக்கள் பலரிடம் பண மோசடி செய்த பலே ஆசாமியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த நாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் வெங்கடேசன், 32; இவர், சின்னசேலத்தில் கடந்த 2019ம் ஆண்டு லட்சுமி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்தார். அப்போது, பொதுமக்கள் பலரிடம் பணம் வசூலித்து இரட்டிப்பாக தருவதாக கூறி திருப்பி தராமல் ஏமாற்றினார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.ஜாமினில் வந்த வெங்கடேசன் சில மாதத்திற்கு முன் தியாகதுருகத்தில் கோல்டன் சூப்பர் மார்க்கெட் என்ற கடையை துவங்கினார்.
பணம் கொடுத்து ஏமாந்த தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 43; தான் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி வெங்கடேசனிடம் கேட்டார். ஆத்திரமடைந்த வெங்கடேசன், ராதாகிருஷ்ணனை தாக்கி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து திருக்கோவிலுார் கிளைச் சிறையில் அடைத்தனர். இவரது தொடர் செயலைக் கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி., (பொறுப்பு) ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதனைத் தொடர்ந்து வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிரண் குரலா உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, சிறையில் உள்ள வெங்கடேசனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X