சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நிலையம் எதிரே கூட்டம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்குகள் தொடர்பாக வருவோர் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நிற்பதால் கொரோனா தொற்று அபாயம் உள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் மக்களின் அச்சத்தை போக்க துணையாக இருக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகளே அலட்சியமாக உள்ளனர்.காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்களுடன் கூட்டமாக இரு தரப்பு ஆதரவாளர்களும் வருகிறார்கள். இவர்கள் போலீஸ் நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் கூட்டமாக சமூக இடைவெளி பின்பற்றாமல், முக கவசம் அணியாமலும் வருகிறார்கள்.

இது பற்றி பணியில் இருக்கும் போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. மக்கள் நலன் கருதி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X