சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருமகனை தாக்கிய மாமனார்உட்பட மூன்று பேர் கைது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சின்னசேலம் : சின்னசேலம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் ஜெகதீசன், 30; இவரது மனைவி ரம்யா என்பவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கடந்த ஆண்டு ரம்யா கோபித்துக் கொண்டு சேலம் மாவட்டம், நரசிங்கபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், ரம்யாவின் தந்தை நடராஜன், சித்தப்பா வேல்முருகன், அண்ணன் ரகோத்தமன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய நான்கு பேர், ஜெகதீசன் வீட்டிற்கு வந்து, குடும்பம் நடத்தும்படி கேட்டனர். இதில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் ஜெகதீசன் தாக்கப்பட்டார்.

இது குறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் நடராஜன், 55; ரகோத்தமன், 25; தினேஷ்குமார், 28; ஆகிய மூன்று பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X