அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் சேலம் பயணம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : முதல்வர் இன்று சேலத்திற்கு காரில் செல்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உளுந்துார்பேட்டையில் போலீசார் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

முதல்வர் பழனிசாமி இன்று 24ம் தேதி சென்னையில் இருந்து சேலம் நோக்கி காரில் செல்கிறார். இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், காந்தலவாடி, மடப்பட்டு பகுதிகளில் இருந்து கள்ளக்குறிச்சி எல்லை வரையுள்ள பைபாஸ் சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதற்காக போலீசார் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கடலுார் எஸ்.பி., (பொறுப்பு) ஸ்ரீஅபிநவ் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,க்கள் ராமநாதன் (கள்ளக்குறிச்சி), விஜயகுமார் (உளுந்துார்பேட்டை) உட்பட இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், முதல்வர் வருவதையொட்டி, இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பைபாஸ் சாலைகளில் போலீசார் எந்தெந்த இடங்களில் அதிகமாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். முதல்வர் வரும் போது சாலையை தடை செய்வது குறித்து எஸ்.பி., போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X