ரெப்கோ வங்கியில் புதிய டெபாசிட் திட்டம் | Dinamalar

இந்தியா

ரெப்கோ வங்கியில் புதிய டெபாசிட் திட்டம் 

Added : ஜூன் 24, 2020
Share

புதுச்சேரி : ரெப்கோ வங்கி புதுச்சேரி கிளையில் புதிய டெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியின் புதுச்சேரி கிளையில் வாடிக்கையாளர்களின் நலனுக்காக 'ரெப்கோ செக்யூர் 2020' என்ற புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.இத்திட்டத்தின்கீழ் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் ஓராண்டிற்கு வழங்கப்படுகிறது.மேலும் தங்க நகைக்கடன் கிராம் ஒன்றிற்கு ரூ.3250 வரை ரூ.100க்கு 74 பைசா, மாத வட்டியில் வழங்கப்படுகிறது. நகை மதிப்பீட்டாளர் கட்டணம் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை ரெப்கோ வங்கியின் புதுச்சேரி கிளை மேலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X