பொது செய்தி

தமிழ்நாடு

நடவடிக்கை! கொரோனாவை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வு...சமூக பரவலாவதைத் தவிர்க்க வேறு வழியில்லை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடைந்துள்ளது. துவக்கத்தில் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த கள்ளக்குறிச்சி தற்போது நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையிலிருந்து வருபவர்களின் முழு விவரமும் தெரியாமல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடைந்துள்ளது. துவக்கத்தில் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த கள்ளக்குறிச்சி தற்போது நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தினமும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையிலிருந்து வருபவர்களின் முழு விவரமும் தெரியாமல் அவர்களை கண்டறிவதில் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகர்புறங்களைக் கடந்து கிராமங்களுக்கும் இந்நோயின் வீரியம் பரவத் தொடங்கியுள்ளது. வெளி மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து வருபவர்களை ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மக்களே தாங்களாகவே முன்வந்து அதிகாரிகளுக்கு தகவல் தருவது அதிகரித்துள்ளது.

ஆனால் அவர்களை உடனுக்குடன் பரிசோதித்து தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதில் மருத்துவத் துறையினர் சுணக்கம் காட்டி வருகின்றனர். அதே போல் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்து, கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது.முதலில் இல்லை என்று அறிவித்து விட்டு அடுத்த 24 மணி நேரம் கழித்து தொற்று உறுதியாகியுள்ளது என மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்குள் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பரவி பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை அறியாமல் அவர்கள் வெளியில் சென்று வரும்போது மற்றவர்களுக்கு பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுவே சமூகப் பரவலுக்கு வழிவகுக்கிறது.

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அடிப்படை வசதி மோசமான நிலையில் உள்ளதாகவும், தரமான உணவுகளை வழங்குவதில்லை என்பதும் சிகிச்சைப் பெற்று திரும்பியவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு சென்று சிகிச்சை பெற தயக்கம் காட்டுவதும் அதிகரித்துள்ளது.தங்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து மருந்து உட் கொள்வதாக அதிகாரிகளிடம் கெஞ்சுகின்றனர்.

நோய் பாதித்தவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கடந்த 20 நாட்களாக மக்கள் வெளியில் நடமாடுவது அதிகரித்துள்ளதால் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு அறிகுறி இன்றி தொற்று காணப்படுகிறது. இவர்களிடமிருந்து சத்தமின்றி மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் யாருக்கு தொற்று இருக்கிறது, இல்லை என்று தெரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆனாலும் மக்கள் வெளி நடமாட்டத்தை குறைக்காமல் இருக்கின்றனர். இது நாளுக்கு நாள் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.அதிகாரிகளின் கண்டிப்புக்கும் அபராதம் செலுத்துவதற்கு பயந்தே பலர் முகக் கவசம் அணிந்து செல்கின்றனர். துவக்கத்தில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் நோய்த்தொற்று அதிகம் பரவியபோது மக்களுக்கு இருந்த பயம் தற்போது இல்லை. உஷாராக இருக்க வேண்டிய இத்தருணத்தில் அலட்சியமாக செயல்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

சமூக பொறுப்புணர்ந்து தேவையின்றி வெளியில் சுற்றுவதை பொதுமக்கள் தவிர்த்தால் மட்டுமே சமூகப் பரவல் நிலைக்கு வந்துள்ள கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X