26 தெருக்களுக்கு சீல்: கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

26 தெருக்களுக்கு 'சீல்': கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 24, 2020
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர பகுதியில் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் கிரண் குராலா நேற்று ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி நகர பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையொட்டி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காய்கறி மார்கெட், குளத்துமேட்டுதெரு, கடைவீதி, காமாட்சி அம்மன் தெரு, மந்தைவெளி உட்பட 4 வார்டுகளில் உள்ள 26

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர பகுதியில் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் கிரண் குராலா நேற்று ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையொட்டி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காய்கறி மார்கெட், குளத்துமேட்டுதெரு, கடைவீதி, காமாட்சி அம்மன் தெரு, மந்தைவெளி உட்பட 4 வார்டுகளில் உள்ள 26 தெருக்களில் பொதுமக்கள் நுழையாமல் இருக்க சவுக்கு கம்பங்கள் மூலம் நேற்று காலை தடுப்பு அமைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது. மேலும் நான்குமுனை சந்திப்பில் இருந்து அண்ணாநகர் வரை 3 இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலா மந்தைவெளி, காய்கறி மார்கெட், சேலம் மெயின்ரோடு வழியாக நடந்து சென்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது மந்தைவெளியில் உள்ள மெடிக்கலில் காய்ச்சல், இருமல் பாதிப்புக்காக டாக்டர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை வழங்கக்கூடாது என எச்சரித்தார். சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், டி.எஸ்.பி., ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X