இந்தியா

பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு ஒரு மாதத்தில் ரூ.12 உயர்ந்தது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதத்தில் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த மே மாதம் 23ம் தேதி பெட்ரோல் லிட்டர் ரூ. 69.37, டீசல் லிட்டர் ரூ. 65.14க்கு விற்பனையானது.கொரோனா தடுப்பு பணிக்காக, புதுச்சேரி அரசு கடந்த மே மாதம் பெட்ரோல் மீது 5.85 சதவீதமும், டீசல் மீது 3.65 சதவீதமும் கொரானா வரி விதித்தது. இதனால் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ. 4 வரை விலை உயர்ந்தது.இந்நிலையில், தற்போது எண்ணை நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்த்தி வருகிறது.இதன் காரணமாக புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெட்ரோல் லிட்டர் ரூ. 76.61, டீசல் ரூ. 70.98 என விற்பனையானது. தினசரி 40 முதல் 70 பைசா வரை விலை உயர்ந்து, நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ. 81.21, டீசல் ரூ. 76.72 ஆக விற்பனையானது.கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 11.84, டீசல் ரூ. 11.58 ஆக விலை உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X