சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திக்குமுக்காடிய வாகன ஓட்டிகள் ; அணிவகுத்து நின்ற வாகனங்கள்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் முன்னறிவிப்பின்றி சாலை, தெருக்கள் அடைக்கப்பட்டதால், ஏராளமான வாகன ஓட்டிகள் செல்வதற்கு மாற்று வழியின்றி திக்குமுக்காடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி நகர பகுதி கொரோனா தொற்று அதிகமானதையொட்டி 4 வார்டுகளில் 26 தெருக்கள் மற்றும் சேலம் மெயின் ரோட்டில் தடை அமைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு தாமதமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு குறித்து அறியாத பொது மக்கள் வழக்கம்போல் கள்ளக்குறிச்சிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர். நான்கு முனை சந்திப்பில் இருந்து சேலம் செல்லும் சாலையில் தடுப்பு அமைக்கப் பட்டதால், அருகில் உள்ள தெருக்கள் வழியாக செல்ல முயன்றனர்.

ஆனால், சேலம் சாலையை இணைக்கும் அனைத்து தெருக்களிலும் தடுப்பு அமைக்கப் பட்டதால், வேறு வழியின்றி சிலர் நடந்து சென்றனர்.அதேபோல் சேலம் பைபாஸ் சாலையில் இருந்து கள்ளக்குறிச்சியில் நுழையும் ஏமப்பேர் ரவுண்டானா பகுதியினுள், வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சுற்றி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் வாகனங்களும், சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வரும் வாகனங்களும் தியாகதுருகம் சாலையில் சென்றன.

70 சதவீத வாகனங்கள் ஒரே சாலையில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தியாகதுருகம் சாலையில் 1 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதேபோல் கச்சிராயபாளையம் சாலையிலும் நெரிசல் ஏற்பட்டது. தாமதமான அறிவிப்பாலும், மாற்று வழி இல்லாததாலும் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X