இந்தியா

முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் புதுச்சேரி நீதிமன்றம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் 3 மாதத்திற்கு பிறகு கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றம் நேற்று முதல் செயல்பட துவங்கியது.

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் நீதிமன்றம் மூடப்பட்டது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கில் தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புதுச்சேரி நீதிமன்றம் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் நேற்று முன்தினம் 22ம் தேதி முதல் இயங்க துவங்கியுள்ளது. நீதிமன்றத்திற்குள் மனுதாரர், எதிர்மனுதாரர், சாட்சிகள், ஜாமீன்தாரர்கள், போலீஸ், அரசு அதிகாரிகள் வர அனுமதி வழங்கப்படவில்லை.நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணையில் உள்ள வழக்குகள் மட்டும் தினசரி 3 முதல் 5 வழக்குகள் பட்டியல் இடப்படுகிறது.

பட்டியிலிடப்பட்ட வழக்கு விசாரணை மட்டும் நடக்கிறது. புதிய வழக்குகள் தொடர நீதிமன்ற வாயில் முன்பு வைத்துள்ள பெட்டியில், மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X