இந்தியா

கொரோனா நிவாரணம் வழங்குவதாக மூதாட்டியிடம் 10 சவரன் செயின் அபேஸ்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

திருபுவனை : நிவாரணம் வழங்க வந்துள்ளதாக கூறி நுாதன முறையில் மூதாட்டியிடம் 10 சவரன் தங்க செயினை பறித்து சென்ற இரு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, மதகடிப்பட்டு பாளையம் புதுநகரை சேர்ந்தவர் ஜெகதாம்பாள்,70; கணவரை இழந்த இவர் மகன் சிவா பராமரிப்பில் உள்ளார்.இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, இரண்டு வாலிபர்கள் பைக்கில் வந்தனர்.'வேளாண் துறையில் இருந்து வருகிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு அரசு மூலம் நிவாரணம் வழங்கி வருகிறோம். அதிகாரிகள் காரில் வந்து கொண்டுள்ளனர். உங்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுங்கள். அதற்கு முன் உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும். கழுத்தில் நகை அணிந்திருந்தால் நிவாரணம் கிடைக்காது. நகையை கழற்றிவிடுங்கள்' என்றனர்.

அதை நம்பிய மூதாட்டி ஜெகதாம்பாள், கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க செயினை கழற்றி அருகில் வைத்துள்ளார். அப்போது அவரை புகைப்படம் எடுத்த வாலிபர் குடிக்க தண்ணீர் கேட்டார்.ஜெகதாம்பாள் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றதும், மற்றொரு வாலிபர் அங்கிருந்த 10 சவரன் தங்க செயினை எடுத்துக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்து தயாராக இருந்தார். தண்ணீர் வாங்கி குடித்த இளைஞர் நாங்கள் பல இடங்களுக்கு செல்ல வேண்டும். சற்று நேரத்தில் அதிகாரிகள் வந்து நிவாரணம் கொடுப்பர் என கூறிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

அதன்பிறகு வீட்டினுள் சென்ற ஜெகதாம்பாள் கழற்றி வைத்த தங்க செயின் இல்லாததால், கதறி அழுதார்.தகவலறிந்த திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார், விசாரணை நடத்தினர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, மூதாட்டியிடம் 10 சவரன் தங்க செயினை பறித்துச்சென்ற இரண்டு வாலிபர்களை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X