இந்தியா

ரேஷன் கடை ஊழியர்கள் முதல்வர் வீட்டை முற்றுகை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : சம்பளம் வழங்க கோரி, ரேஷன் கடை ஊழியர்கள் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டிற்கு அரிசிக்கு பதில் பணமாக வழங்கப்படுவதால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடந்த 32 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியும், அரசு அதிகாரிகள் வழங்கினர். மஞ்சள் கார்டுகளுக்கான இலவச அரிசி, ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என அமைச்சர் கந்தசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 8 ம் தேதி முதல் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டது.ஆனால் மஞ்சள் கார்டுகளுக்கான இலவச அரிசி, ஆசிரியர்கள் மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அறிந்த ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம், குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நேற்று முதல்வர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய முதல்வர், மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி அனுப்ப கோப்பு அனுப்பினால், கவர்னர் திருத்தி ஆசிரியர்கள் மூலம் அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார் .மேலும், சம்பளம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக கூறினார். அதனையேற்று ரேஷன் கடை ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X