இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வுசி.ஐ.டி.யூ., போராட்டம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில், ஏ.எப்.டி., திடல் அருகே, கோரிக்கை அட்டை ஏந்தும் போராட்டம் நடந்தது.சீனுவாசன் தலைமை தாங்கினார். மதிவாணன், ரவிச்சந்திரன், கலியமூர்த்தி, மது முன்னிலை வகித்தனர்.ஆட்டோ சங்கம் சார்பில் ரவிக்குமார், விஜயக்குமார், மனோகர், டாக்சி சங்கம் சார்பில் சுப்ரமணி, ஆதித்யன், மினி லாரி சங்கம் சார்பில் முருகன், ராஜா, முகமது, மாதவன், மினி லோடு கேரியர் சங்கம் சார்பில் ஜோதிபாசு, ராஜா, மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், வாழ்வாதாரம் இழந்துள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 6 மாத காலத்திற்கு மாதம் 7,500 ரூபாய் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X