இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவோம் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவு;அறிவார்ந்த செயல்பாடுகளுடன் கோவிட் பாதிப்புகளை குறைப்பதற்கு, நிர்வாகத்திற்கு தற்போதைய தேவை ஒருங்கிணைந்த செயல்பாடே.அனைவரும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதும், பாதித்தவர்களின் உயிர்களை காப்பாற்றுவதையும் நமது குறிக்கோளாக கொள்ள வேண்டும்.கோவிட் நோய் பரவலை கட்டுப்படுத்திட நிர்வாக செயல்பாடுகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது பற்றி ராஜ் நிவாஸில் இருந்து ஆலோசித்து வருகிறோம்.கவர்னர் அலுவலகம் ஒரு சாதாரண பார்வையாளராக மட்டும் இருக்காது என்பதில் தெளிவாக உள்ளோம்.

யூனியன் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு கவர்னர் அலுவலகம் ஒரு நிலையான பங்களிப்பாளர். அந்த பங்களிப்பு மற்றும் சேவை நோக்கத்திற்காகத்தான் கவர்னர் அலுவலகம் உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள கோவிட் ஒரு இக்கட்டான கால சூழ்நிலை. இந்த காலகட்டத்தில் பதில்களை வலுப்படுத்தாமல் சுருக்கமாக சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்றாகும். நாங்கள் உங்களுடைய நிர்வாகத்துடன் போட்டியிடவில்லை. மாறாக, உங்களுடைய ஒத்துழைப்புடன் செயல்பட்டு கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் பொது நோக்கத்திற்காக உழைக்கிறோம்.

புதுச்சேரி மக்களின் நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு இன்றியமையாதது. கோவிட் பரவலை கட்டுப்படுத்த எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் கவர்னர் அலுவலகம் வரவேற்கிறது. எங்கள் நோக்கங்களை சந்தேகிக்க தேவை இல்லை. ஒவ்வொருவருடைய மதிப்புமிக்க பங்களிப்பையும் ராஜ் நிவாஸ் மதிக்கிறது என்பதை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும். கோவிட் மனித குல எதிரி. அதைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த பொறுப்புடன் செயல்படுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X