இந்தியா

சன்டே மார்க்கெட்டை மாற்ற வேண்டாம் முதல்வரிடம் இந்திய கம்யூ., மனு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'சன்டே மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, இந்திய கம்யூ., சார்பில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்திய கம்யூ., மாநில செயலர் சலீம், துணை செயலர் அபிஷேகம், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச்செயலர் சேதுசெல்வம், சன்டே மார்க்கெட் சங்க செயலர் துரை செல்வம் ஆகியோர் முதல்வர் நாராயணசாமியை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.மனு விபரம்:புதுச்சேரியில் கடந்த 1970ம் ஆண்டில் இருந்து அரை நூற்றாண்டு காலமாக சன்டே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அரசிலும், தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்காதவர்கள் சன்டே மார்க்கெட்டில் கடை வைத்துள்ளனர்.காந்தி வீதியில் சன்டே மார்க்கெட் இருக்கக் கூடாது என நிரந்தர கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர் என்ற கருத்து சமீபகாலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நிரந்தர கடை உரிமையாளர்கள்தான் குடிநீர், கழிப்பிட உதவிகள் அளித்து, சன்டே மார்க்கெட் வியாபாரிகளை ஆதரித்து வருகின்றனர்.காரணம், சன்டே மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் அன்றைய தினத்தில் திறந்திருக்கும் தினசரி கடைகளிலும் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அதனால், நிரந்தர கடைகளிலும் வியாபாரம் நடக்கும் சூழல் உள்ளது என்பதே உண்மை. ஆகவே, காந்தி வீதி, நேரு வீதி உள்ளிட்ட தற்போது செயல்படும் இடத்திலேயே சன்டே மார்க்கெட் தொடர்ந்து செயல்படுவதுதான் சரியாக இருக்கும். சன்டே மார்க்கெட் வியாபாரத்தை இடமாற்றம் செய்யக்கூடாது. கொரோனா தொற்று தாக்கம் குறைந்தவுடன், அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகளில் சன்டே மார்க்கெட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X