இந்தியா

விதி மீறும் கடைகளுக்கு 'சீல்' முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது:புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. இதனால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடைகள் பகல் 2:00 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடற்கரை சாலையும் மூடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 2ம் தேதி வரை நீடிக்கும்.டீ கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாமல் கும்பலாக நின்று டீ குடிப்பதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு 'சீல்' வைப்பதோடு, கடை உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைத்தால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.ஊரடங்கில் படிப்படியாக தளர்வு கொண்டு வந்தாலும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்னும் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும். அதற்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.999 கோடி வழங்க வேண்டி, மத்திய அரசுக்கு 17 முறை கடிதம் எழுதியுள்ளேன்.

பிரதமர் இதுவரை செவிசாய்க்கவில்லை.பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ரூ. 18 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. அதை மக்களுக்கு கொடுக்க காங்., தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார். அதற்கும் பிரதமர் செவிசாய்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X