பொது செய்தி

இந்தியா

டீ விற்பவரின் மகள் விமானப்படை விமானி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, டீ விற்பனை செய்யும் தொழிலாளியின் மகள், இந்திய விமானப் படையின் போர் விமானங்களை இயக்கும் விமானியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.மத்திய பிரதேசத்தில், நீமுச் மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் டீ விற்பனை செய்து வரும் சுரேஷ் கங்க்வாலின் மகளான, ஆஞ்சல் கங்க்வால், 24, சமீபத்தில் இந்திய விமானப் படையின் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
tea seller, Daughter, Indian Air Force

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, டீ விற்பனை செய்யும் தொழிலாளியின் மகள், இந்திய விமானப் படையின் போர் விமானங்களை இயக்கும் விமானியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

மத்திய பிரதேசத்தில், நீமுச் மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் டீ விற்பனை செய்து வரும் சுரேஷ் கங்க்வாலின் மகளான, ஆஞ்சல் கங்க்வால், 24, சமீபத்தில் இந்திய விமானப் படையின் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை அடுத்துள்ள டிண்டிகல்லில் உள்ள விமானப் படைஅகாடமியில் பயிற்சி முடிந்த அவர், போர் விமானங்களை இயக்க உள்ள ஒரு சில பெண் விமானிகளில் ஒருவராக திகழ்கிறார்.


latest tamil news


இது குறித்து,அவருடைய தந்தை, சுரேஷ் கங்க்வால் கூறியுள்ளதாவது:கடந்த, 2013ல், உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, இந்திய விமானப் படை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.அதைப் பார்த்த ஆஞ்சல்,தன் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பின் மூலம், போர் விமானங்களை இயக்கும் விமானியாகி உள்ளார். அவர், நம் நாட்டுக்கு சேவையாற்ற உள்ளது, பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


ஆஞ்சல் கங்க்வாலுக்கு, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X