இந்தியா

நர்ஸ் உள்ளிட்ட 19 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரே நாளில் செவிலியர் உள்ளிட்ட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யானது.

புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது.இதில், 216 பேர் கோவிட், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால் அரசு மருத்துவமனையில் 11 பேரும், ஏனாம் அரசு மருத்துவமனையில் 12 வயது சிறுவனும் சிகிச்சையில் உள்ளனர்.புதுச்சேரியில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 15 பேரில், 5 பேர் லாஸ் பேட்டை பகுதியையும், 5 பேர் முதலியார்பேட்டை பகுதியையும் சேர்ந்தவர்கள். அரியாங்குப்பம், சோரப்பட்டு, வில்லியனுார் ஆகிய பகுதி களில் தலா ஒருவர் தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளிக்கு கொரோனாஅரசு பொது மருத்துவமனையில் வேறு நோய்களுக்காக சிகிச்சைக்கு சேர்ந்த முதியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, முதியவர்கள் கதிர்காமம் கோவிட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அந்த வார்டில் பணியாற்றிய செவிலியருக்கு கொரோனா இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.முதல் இரண்டு பரிசோதனைகளில் தொற்று இல்லை என முடிவுகள் வந்தது. மூன்றாவது சோதனையில் செவிலியருக்கு தொற்று இருப்பதாக முடிவு வந்தது. தொடர்ந்து, அவர் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இ.என்.டி. பிரிவு நோயாளி ஒருவருக்கு, அறுவை சிகிச்சைக்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தொற்று இருப்பது தெரிய வந்ததால், கோவிட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.16 பேர் டிஸ்சார்ஜ்கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேரும், ஜிப்மர் மருத்துவனையில் 4 பேரும் நேற்று முன்தினம் குணமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை, மொத்தம் 165 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9 பேர் பலி : முதலியார்பேட்டையை சேர்ந்த 60 வயது மூதாட்டி சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது .பின், கோவிட் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். நேற்றுமுன்தினம் இரவு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இவரையும் சேர்த்து புதுச்சேரியில் இதுவரை 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X