இந்தியா

காரில் மணல் கடத்தியவர் கைது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பாகூர் : காரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குருவிநத்தம் வழியாக ஆற்று மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், நேற்று விடியற்காலை குருவிநத்தம் வாட்டர் டேங்க் அருகே கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியாக சென்ற பிஒய் 01 எக்ஸ் 8208 பதிவெண் கொண்ட மாருதி ஓம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு பகுதியில் இருந்து மணலை திருடி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து, மினி வேனையும், அதிலிருந்த 35 மணல் மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குருவிநத்தம் மேட்டு தெருவை சேர்ந்த தமிழரசன்,20; என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X