சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வில்சன் கொலை வழக்கு: 'சிம் கார்டு' வாங்கி கொடுத்த 12 பேர் மீது குற்றப்பத்திரிகை

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ISIS, NIA, Chennai news, Sim Cards, Terrorist, National Investigation Agency

சென்னை: சிறப்பு எஸ்.ஐ., வில்சனை கொலை செய்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, 'சிம் கார்டு'கள் வாங்கி கொடுத்த, 12 பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர், வில்சன், 57. இவர், இந்தாண்டு, ஜனவரி, 8 இரவு, அங்குள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டார்.


latest tamil news


இந்த கொலை வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, தவுபீக், 28; அப்துல் சமீம், 32, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, மொபைல் போன்களுக்கு, சிம்கார்டுகள் வாங்கி கொடுத்ததாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, பச்சையப்பன்(37), சென்னையை சேர்ந்த, ராஜேஷ்(34), சேலத்தை சேர்ந்த அன்பரசன் (27), அப்துல் ரகுமான் (44), லியாகத் அலி (29), பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனீப் கான்(29), இம்ரான் கான்(32), முகமது ஜயீத்(24), இஜாஸ் பாஷா(46), ஹூசைன் ஷெரீப்(33), மெகபூப் பாஷா (48) மற்றும் கடலூரை சேர்ந்த காஜா மொய்தீன்(52) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

வில்சன் கொலை வழக்கை விசாரித்து வரும், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் நேற்று, பச்சையப்பன் உள்ளிட்ட, 12 பேர் மீது, சென்னை, பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜூன்-202016:35:18 IST Report Abuse
Endrum Indian இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை வெறும் வில்ஸ் சிகரெட் மட்டுமல்ல இந்த தெண்டமான ஜல்லடை ஓட்டை சட்டமும் தான். தவறு செய்தார்கள் கண்டோம் கைது செய்தோம் தண்டனை கொடுத்தோம் என்று இருக்கவே இருக்காது விசாரணை விசாரணை ஜாமீன் சுதந்திரப்பறவைகள் இப்படித்தான் சட்டம் செல்கின்றது
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202014:21:46 IST Report Abuse
Rasheel மார்க்கம் மிக பெரிய ஆபத்தாக உள்ளது. லடாக்இல் இந்தியாவை காட்டி கொடுப்பது முதல், நாகரீகமற்ற காட்டுமிராண்டி கொலைகள் செய்வது வரை. அதற்கு இணை கம்மிகளும் கூட சீனாவின் படையெடுப்பை கண்டிக்காத கூட்டம்.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
24-ஜூன்-202012:25:31 IST Report Abuse
Jayvee கம்யூனிஸ்டிகள் கொலையாளிகளுக்கு கிருத்துவர்களுக்கு இடையே பஞ்சாயத்து பேசுவதாக ஒரு செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X