சமரசம் செய்யவில்லை ரஷ்யா கடும் மறுப்பு| Dinamalar

சமரசம் செய்யவில்லை ரஷ்யா கடும் மறுப்பு

Added : ஜூன் 24, 2020
Share

மாஸ்கோ: 'இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்னையில், நாங்கள் சமரசம் செய்யவில்லை. மூன்றாவது நாட்டின் தலையீட்டை அவர்கள் விரும்பவில்லை' என, ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஜெர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:இந்திய - சீன எல்லை பிரச்னையில் இரு நாடுகளுக்கு இடையே நாங்கள் சமரசம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். இந்த பிரச்னையை, சம்பந்தபட்ட இரு நாடுகளுமே சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ளும்.
இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இரு நாடுகளுமே விரும்பவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்ததுமே, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சு நடந்தது. இந்த பேச்சு, தொடர்கிறது. பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்பதையே ரஷ்யாவும் விரும்புகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X