சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்றால் இறந்த கணவர் உடலுடன் தவித்த மூதாட்டி; மாநகராட்சியின், 'கைங்கரியத்தால்' மக்கள் அவதி

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவர் உடலுடன், பல மணி நேரம் மூதாட்டி ஒருவர் தவித்த சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சி, ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம், குமரபுரம், முதல் தெருவைச் சேர்ந்த, 67 வயது முதியவர், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.இவரின் இரண்டு மகள்களுக்கு திருமணமாகி, வெளி மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். முதியவர், தன் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.

சோர்வு:

சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் தவித்து வந்தார். மாநகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் பார்த்து, 'இது சாதாரண காய்ச்சல்' எனக் கூறினர். இந்நிலையில், காய்ச்சல் குறையாமல் சோர்ந்து காணப்பட்டார். தனியார் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தியதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் மரணமடைந்தார். இது தொடர்பாக, மாநகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 'அவருக்கு இயற்கை மரணம் நிகழ்ந்துள்ளது. எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை' என, அவர்கள் கைவிரித்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்று கூறியும் கண்டுகொள்ளவில்லை.

இறுதி சடங்கு:

கொரோனா தொற்றால் அவர் இறந்ததால், அக்கம் பக்கத்தினரும், உதவ முன்வர யோசித்தனர். இதனால், முதியவரின் மனைவி, செய்வது தெரியாமல், பல மணி நேரம் கணவரின் உடலின் அருகில் அமர்ந்து, கதறி தவித்தார். தகவலறிந்த ஆதம்பாக்கம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.இதையடுத்து, இறந்தவருக்கு, மாநகராட்சியினரால் இறுதி சடங்கு செய்யப்பட்டது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202006:33:44 IST Report Abuse
Mani . V இந்த இரக்கமற்ற, கொடிய மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்களை (அதிகாரிகள் உள்பட) நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்டு தள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X