தமிழ்நாடு

கடப்பேரி ஏரிக்கு விடிவு கிடைப்பது எப்போது?

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 கடப்பேரி ஏரிக்கு விடிவு கிடைப்பது எப்போது?

தாம்பரம் : சீரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால், மேற்கு தாம்பரம், கடப்பேரி ஏரி, கழிவுநீர் கலந்து, மீண்டும், பச்சை நிறமாக மாறி உள்ளதுடன், தாம்பரத்தின் கூவம் போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரியை சீரமைக்க, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேற்கு தாம்பரம், கடப்பேரியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. அரசு ஆவணங்களின் படி, பொத்தேரி எனவும், இது அழைக்கப்படுகிறது.மொத்தம், 65 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரி, ஆக்கிரமிப்பில் சிக்கி, 40 ஏக்கராக சுருங்கியது. ஏரியில், 30 ஆண்டுகளுக்கும் மேல், கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பை கலந்து, ஏரி தண்ணீரும், பச்சை நிறமாக மாறிவிட்டது.

இதை சீரமைக்க, கடப்பேரி ஏரியை சுற்றி வசிக்கும், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தும், பொதுப்பணித்துறை கண்டுகொள்ளவில்லை.இதனால், நலச்சங்கத்தினர் ஒன்றிணைந்து, ஏரியை பராமரிக்க, 'கடப்பேரி பசுமை பாதுகாப்பு நலச்சங்கம்' என்ற அமைப்பை, ஓராண்டிற்கு முன் உருவாக்கினர்.அவர்களுக்கு, 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என, நீர்நிலைகளை துார் வாரி பராமரிக்க, பொது மக்கள் முன்வர வேண்டும் என்பதை சுட்டிகாட்டி, நம் நாளிதழில் வெளியான செய்திகள், ஊக்கமளித்தன.

நலச்சங்கத்தினருக்கு, ஏரியில் உள்ள கழிவுநீரை வெளியேற்ற, அனுமதி கிடைத்ததை அடுத்து, 2019, ஜூனில், மூடி மறைந்து கிடந்த, ஏரியின் போக்கு கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்பட்டது.மேலும், ஏரியை துார் வாரி, 'பேவர் பிளாக்' கற்களுடன் கூடிய, பாதைகள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்தி, சிறுவர் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், கழிவுநீர் வெளியேற்றப்பட்ட பின், ஏரிக்குள் கிடந்த குப்பையை அகற்றவே, நலச்சங்கத்தினர் பெரும்பாடுபட்டனர்.குப்பையை முழுதுமாக அகற்றுவதற்குள், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததால், பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டதாக, அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், தாம்பரம் நகராட்சி சார்பில், 3.50 கோடி ரூபாய்க்கு, ஏரியை துார் வார திட்ட அறிக்கை தயாரித்து, நகராட்சி நிர்வாக கமிஷனர் அலுவலகத்திற்கு, அனுப்பப்பட்ட கோப்புகளும் தேங்கி கிடக்கின்றன.இதனால், தாம்பரம் ரயில்வே நிர்வாகம், எம்.டி.சி., பணிமனை ஆகியவற்றுடன், நகராட்சி நிர்வாகத்தின் கழிவுநீர் கலந்து, மீண்டும் பச்சை நிறத்தில், ஏரி நீர் மாறி உள்ளது.இதன் அருகே செல்ல முடியாத அளவிற்கு, கூவத்தை போல் துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.அதனால், கொரோனா பிரச்னை முடிந்ததும், ஏரி புனரமைப்பு பணிகளை, மீண்டும் துவங்க, கலெக்டர் ஜான் லூயிஸ் அனுமதிக்க வேண்டும் என, நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X