பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் மிதக்கும் திருமழிசை மார்க்கெட்

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில், கடைகள் மற்றும் நடை பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், சி.எம்.டி.ஏ., மீது வியாபாரிகள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மே, 5ல் மூடப்பட்டது. மாற்று ஏற்பாடாக, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில், 200 கடைகளுடன் தற்காலிக காய்கறி மார்க்கெட், மே, 11ல் திறக்கப்பட்டது.இந்த வளாகத்தில், அடிப்படை வசதிகள் செய்வதில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், சி.எம்.டி.ஏ., அங்காடி நிர்வாக குழு இடையே குழப்பம் நிலவுகிறது. அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள், நுழைவு கட்டண வசூலில் மட்டுமே குறியாக இருப்பதாக புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், தற்காலிக அங்காடி வளாகத்தில், பல இடங்களில் மழைநீர், குளம் போன்று தேங்கியுள்ளது.இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கடைகளுக்குள் மழைநீர் தேங்குவதால், காய்கறி மூட்டைகளை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. வியாபாரிகள், பணியாளர்கள் நிற்க முடியாமல் தவிக்கின்றனர்.இதனால், ஏராளமான காய்கறிகள் விற்பனைக்கு முன்பே, அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. இது தொடர்ந்தால், வியாபாரிகள் வெளியேறும் நிலை ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202007:37:44 IST Report Abuse
ஆப்பு அதிரடியா திருமழிசைக்கு மாத்துனாங்க. அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்துக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X