இந்தியா

அரியாங்குப்பத்தில் விழிப்புணர்வு பணி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : அரியாங்குப்பம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையம் சார்பில் மலேரியா, டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணி நேற்று நடந்தது.

சுகாதார உதவியாளர் ஜெயஸ்ரீ வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பூச்சியியல் வல்லுனர்கள் செந்தில்வேலன், செல்வகுமாரி முன்னிலை வகித்தனர்.சுகாதார உதவியாளர்கள் தயாளன், ஜெகநாதன், கரிகாலன், பிரகாஷ் மேற்பார்வையில் பைலேரியா களப்பணியாளர்கள், ஆஷா ஊழியர்கள் வீடு வீடாக சென்று கிணறுகள், மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளை பார்வையிட்டு, அவற்றை மூடி வைப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து, மழை காலம் நெருங்கி வருவதனால் தங்கள் வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களான தேங்காய் மட்டை, ஆட்டு உரல், பிளாஸ்டிக் கப், வீட்டினுள் உள்ள பிரிட்ஜ் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் ட்ரே ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து, மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X