ராயபுர மண்டலத்தில் 4,000த்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு| Dinamalar

தமிழ்நாடு

ராயபுர மண்டலத்தில் 4,000த்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Added : ஜூன் 24, 2020
Share
 ராயபுர மண்டலத்தில் 4,000த்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

ராயபுரம் : ராயபுரம் மண்டலத்தில், தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை, 4,௦௦௦த்தை நெருங்கி வருகிறது.

சென்னையில், நேற்றுடன், 42 ஆயிரத்து, 752 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று கண்டறியும் விகிதம் உயர்ந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது.அதன்படி, சென்னையில், 23 ஆயிரத்து, 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது, 55.56 சதவீதமாகும். தவிர, 18 ஆயிரத்து, 372 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிர்பாராத விதமாக, 623 பேர் பலியாகியுள்ளனர்.குறிப்பாக, ராயபுரத்தில், 6,484 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 3,972 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது, 61.25 சதவீதமாகும். எண்ணிக்கை விரைவில், 4,௦௦௦த்தை எட்டக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, 2,403 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 109 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X