சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் விழுந்து இறந்தவருக்கு தொற்று; அடக்கம் செய்த பின் வந்த முடிவால் அதிர்ச்சி

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

முடிச்சூர் : கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே, இறந்தவரின் உடலை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், உறவினர்களிடம் ஒப்படைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட, அப்பாவு நகரைச் சேர்ந்தவர், சுப்ரமணியன், 55.சில மாதங்களாக, உயர் ரத்த அழுத்த நோய்க்கு, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 18ம் தேதி, தன் வீட்டில் உள்ள, கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கால் இடறி கால்வாய்க்குள் விழுந்து காயமடைந்தார். தொடர்ந்து, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து, அன்று மாலை, 3:00 மணியளவில், மேல் சிகிச்சைக்காக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.தொடர்ந்து, 19ம் தேதி மாலை, 4:00 மணியளவில், சிகிச்சை பலனின்றி சுப்ரமணியன் இறந்தார்.அவரது உடல், 20ம் தேதி காலை, 8:00 மணியளவில், முடிச்சூரில் தகனம் செய்யப்பட்டது.அதேநேரம், அன்று மாலை, 4:00 மணியளவில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார சுகாதார அதிகாரிகளிடம், மருத்துவ பரிசோதனையில், சுப்ரமணியனுக்கு நோய் தொற்று உறுதியாகி இருப்பதாக, தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரிசோதனை முடிவு வரும் முன்பே, சுப்ரமணியனின் உடல், முறையான பாதுகாப்பின்றி, போர்வையில் சுற்றி, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, தற்போது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள், விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சுகாதார பணி தாமதம்!மருத்துவமனை நிர்வாகம், 20ம் தேதி தகவல் தெரிவித்தும், இரண்டு நாட்கள் கழித்து, நேற்று தான், முகாம் நடத்தப்பட்டு, சுப்ரமணியன் வீட்டருகில் வசிப்போருக்கு, பரிசோதனை செய்யப்பட்டது. இதிலும், சிலருக்கு மட்டுமே, சோதனை நடத்தப்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202006:35:19 IST Report Abuse
Mani . V பொறுப்பற்ற மருத்துவமனை ஊழியர்கள் அதிகாரிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X