சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடுவாஞ்சேரி ஏரி நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கூடுவாஞ்சேரி ஏரியின் தற்போதைய நிலை குறித்து ஆராய, செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

30 ஏக்கர்

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள ஏரி, பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. அரசு ஆவணங்களின்படி, 46.95 ஏக்கர் ஏரியை நம்பி, கூடுவாஞ்சேரி, ஆதனுார், மாடம்பாக்கம் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 150 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்தது. தற்போது, 30 ஏக்கரில் மட்டுமே நடக்கிறது.நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, மறைமலை நகர் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீருடன், தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், இந்த ஏரியில் கலக்கிறது.

ஏரியை சீரமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாழடைந்து வருகிறது. எனவே, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வழக்கு பதிவு

இதுகுறித்து, நம் நாளிதழில், 13ம் தேதி செய்தி வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.வழக்கை விசாரித்த, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா பிறப்பித்த உத்தரவு:

ஏரியின் தற்போதைய நிலை குறித்து ஆராய, செங்கல்பட்டு கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, பொதுப்பணித்துறை அதிகாரி, நீர்வள அமைப்பு அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.இந்தக் குழுவினர், ஏரியில் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஏரியை பராமரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை போன்றவை குறித்து, செப்., 29ம் தேதிக்குள், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X