தமிழ்நாடு

அம்பத்துாரில் 5,000 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு நல மையம் தயார்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

அம்பத்துார் : கொரோனா பேரிடரை எதிர்கொள்ளும் வகையில், 5 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட, கொரோனா சிறப்பு நல மையத்தை, சென்னை மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சென்னை புறநகரை ஒட்டிய மாநகராட்சி பகுதியில், கூடுதல் படுக்கை வசதிகளுடன், 'கோவிட் கேர் சென்டர்' என்ற, கொரோனா சிறப்பு நல மையம் அமைக்கப்படுகிறது.

பரிசோதனை

அம்பத்துார் மண்டலம், அத்திப்பட்டில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கட்டடத்தில், இந்த மையம் அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது. நேற்று மாலை, அங்கு பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அளித்த பேட்டி: தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வோரை, 4,500 களப்பணியாளர்கள் மூலம், கண்காணித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் பணி, தொடர்ந்து வருகிறது.சென்னையில் இதுவரை, 30 ஆயிரம் பேர், குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகள், நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றனர்.

மூச்சு திணறல் மற்றும் அறிகுறிகள் அதிகமாக இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, ராஜிவ் காந்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை போன்ற உயர் ரக மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவர்களுக்கு, அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை, கோவிட் ஹெல்த் சென்டர் என்ற கொரோனா மையங்களில் அனுமதித்து, மருத்துவர்களின் உன்னிப்பான கவனிப்புடன், சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மூன்றாவதாக, குறைந்த அறிகுறி அல்லது அறிகுறி இல்லாதவர்களை, கோவிட் கேர் சென்டர் என்ற மையங்களில் தங்க வைத்து, முறையான மருத்துவ சிகிச்சை, சத்தான உணவு கொடுத்து, அவர்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்து, வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.

சிகிச்சை:

நான்காவாதாக, பரிசோதனையின் அடிப்படையில், மருத்துவர் பரிந்துரையில், வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாம்.அம்பத்துார், அத்திப்பட்டில், 1,450 குடியிருப்புகள் கொண்ட, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடத்தை, கோவிட் கேர் சென்டராக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

பேரிடர் காலத்தில், 17 ஆயிரத்து, 500 படுக்கை வசதிகளுடன், கோவிட் கேர் சென்டர், 55 சிறப்பு மையங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், 12 ஆயிரத்து, 500 படுக்கை வசதிகள் கொண்ட மையங்களில், இன்று வரை, 3,200 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, வீடு திரும்பி உள்ளனர். இன்னும், நிறைய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

அம்பத்துாரில் உள்ள இந்த மையத்தின், 1,450 குடியிருப்புகளில், 450 குடியிருப்பில், மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர்கள், லேப் டெக்னீஷியன், மின் பணியாளர், குடிநீர், கழிவுநீர் துறை பணியாளர்களுக்கான, உரிய இடம் ஒதுக்கப்படும்.ஆயிரம் குடியிருப்புகளில், ஒரு குடியிருப்பில், ஐந்து படுக்கை வீதம், 5 ஆயிரம் படுக்கை வசதிகள் உருவாக்கப்படும். அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், 10 நாட்களில், இம்மையம், 50 சதவீதம் செயல்படத் துவங்கிவிடும். அடுத்த மாதம், 10ம் தேதிக்குள் முழுமையாக செயல்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X