இந்தியா

ஒரே இரவில் மூன்று வீடுகளில் திருட்டு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

வில்லியனுார் : ஒரே கிராமத்தில் நள்ளிரவில் மூன்று வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் மனைவி பார்வதி,70; இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர், பார்வதி கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை பறித்தார். சுதாரித்துக் கொண்ட பார்வதி, திருடனை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். உதவிக்கு யாரும் வராததால், திருடன் மூதாட்டியை உதறி தள்ளிவிட்டு தங்க செயினுடன் தப்பி சென்றார்.

அதேகிராமத்தில் திரிஸ்டார் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி சரசு,39; வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு பிள்ளைகளுடன் வாசலில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவை திறந்து அதில் இருந்த 2 சவரன் தங்க செயின், 2 கிராம் மோதிரம் மற்றும் ரூ.5,000 பணத்தை திருடிச் சென்றுள்ளார்.அதேபோன்று, கோனேரிக்குப்பம் சாலையில் பூட்டியிருந்த நெடுஞ்செழியன் வீட்டு கதவை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர் பீரோவில் இருந்த ரூ. 6,000 ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

தகவலறிந்த வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளை உடைத்து பணம், நகையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X