இந்தியா

குழந்தை இறந்த சோகம்: தந்தை தற்கொலை முயற்சி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : உடல் நலக்குறைவால் குழந்தை இறந்த துக்கம் தாங்க முடியாமல், தற்கொலைக்கு முயன்ற தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் சதிஷ். இவரது மனைவி தெய்வநாயகி. திருமணமாகி இரண்டு ஆண்டாகும் இவர்களுக்கு ஹஷ்விக் என்ற 10 மாத ஆண் குழந்தை இருந்தது .சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்த சதிஷ், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதமாக மனைவி மற்றும் குழந்தையுடன் புதுச்சேரி, தியாகராஜ வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார்.சில நாட்களுக்கு முன் குழந்தை ஹஷ்விக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடன், ராஜிவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவ மனையில் சேர்த்தனர்.

கடந்த 20ம் தேதி டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பினர். மறுநாள் 21ம் தேதி மீண்டும் குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.குழந்தை இறந்த துக்கம் தாங்காத சதிஷ் நேற்று முன்தினம் வீட்டில் பினாயில் குடித்து மயங்கி விழுந்தார். அவரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பெரியக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X