சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் 437 பேருக்கு தொற்று

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 437 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து கலெக்டர் கிரண் குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்கனவே 395 பேர் பாதிக்கப்பட்டிருந்த னர். இந்நிலையில், 751 பேருக்கு பரிசோதனை செய்ததில், 45 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மீதமுள்ள 42 பேரை சேர்த்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்தது. இதில் 311 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் இறந்தார். மற்ற 125 பேரில், 44 பேருக்கு மட்டுமே அறிகுறி உள்ளது. 81 பேருக்கு அறிகுறி இல்லை.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X