சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதைப் பொருள் பாக்கெட்டுகள் மாயம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கடலுார் : பரங்கிப்பேட்டையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளில் 8 பாக்கெட்டுகளில், 4 பாக்கெட்டுகள் மாயமானது குறித்து, சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரிடம், டி.எஸ்.பி., கார்த்திகேயன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கடற்கரையோரத்தில், மார்ச் மாதம் 14ம் தேதி ஒரு பண்டல், கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதியினர், பரங்கிப்பேட்டை போலீசுக்கு, தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் , பண்டலை பிரித்து பார்த்ததில், 8 பாலிதீன் பாக்கெட்டுகள் இருந்தன. சோதனையில், போதை பொருள் இருந்தது. அவற்றை பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து வைத்தனர். இது குறித்து உயரதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கவில்லை.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, மாமல்லபுரம் கடற்கரையோரத்தில், போதைப் பொருள் கிடைத்தது.

இந்த தகவல், சி.புதுப்பேட்டையை சேர்ந்தவர்களுக்கு தெரிந்து, வெளியில் சொல்லிவிடுவர் என பயந்து, போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார், உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.பின்னர், டி.எஸ்.பி., கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து, போதைப்பொருள் ஒப்படைத்த கிராமத்தினர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரிடம் விசாரித்தார்.கைப்பற்றிய 8 பாக்கெட்டுகளில், நான்கு பாக்கெட்டுகள் மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு பாக்கெட்டுகள் என்ன ஆனாது என தெரியவில்லை.மாயமான நான்கு போதைப் பொருள் பாக்கெட்டுகளின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும் என்பதால், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரிடம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையால், பரங்கிப்பேட்டை போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X