இந்தியா

சாலைகளை சீரமைக்க வேண்டி மனு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்து தர வேண்டி, தலைமைப் பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கத்தை, நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க., செயலர் நடராஜன், சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் சித்து, ஊர் பிரமுகர் ரங்கநாதன் ஆகியோர் சந்தித்து அளித்த மனு விபரம்:குயவர்பாளையம் சாத்தானி வீதி, வ.உ.சி., வீதி, பிள்ளையார் கோவில் வீதி, செல்லபெருமாள் கோவில் வீதி, திருமால் நகர் மூன்றாவது குறுக்கு தெரு வடக்கு பகுதி ஆகிய புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான தெருக்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பொதுப்பணித் துறை மூலமாக நடந்தது.

பணி முடிந்தவுடன் சாலை அமைக்காமல் சென்று விட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.பொதுப்பணித் துறை பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை நேரிலும், கடிதம் மூலமாக தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.பொதுமக்களின் நலன் கருதி மிக மோசமாக உள்ள மேற்கண்ட வீதிகளை சரி செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X