சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் டாக்டர் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனை டாக்டர் உட்பட 9 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 617 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 12 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 209 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் முண்டியம்பாக்கத்தை சேர்ந்த 37 வயது டாக்டர் மற்றும் அன்னியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய 32 வயது பயிற்சி பெண் செவிலியர் உட்பட மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு 617 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் 689 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோயில் இருந்து குணமடைந்த 5 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதாரத்துறை சிறப்பு மையங்களில் 775 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சி செவிலியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அன்னியூர் ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X