சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பரங்கிப்பேட்டை : கிள்ளையில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கடலுார் மாவட்டம், கிள்ளை, தளபதி நகரைச் சேர்ந்தவர் வேலு மகன் பாபு, 23; இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் கிள்ளை மாரியம்மன் கோவிலில் இன்று (24ம் தேதி) திருமணம் நடத்த இருவீட்டின் பெற்றோரும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.இந்நிலையில், திருமண வயது பூர்த்தியாகாத நிலையில், பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கிள்ளை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பு பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், பெண்ணுக்கு 13 வயது மட்டுமே ஆன நிலையில் திருமண ஏற்பாடு செய்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், திருமணத்தை தடுத்து நிறுத்தி, இருவீட்டின் பெற்றோரையும் எச்சரிக்கை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X