பொது செய்தி

இந்தியா

காயமடைந்த வீரர்களுக்கு நரவானே பாராட்டு

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

லடாக்: லடாக்கில், சீன ராணுவத்துக்கு எதிராக நடந்த மோதலில் தைரியமாக போரிட்டு, காயமடைந்த வீரர்களை, ராணுவ தலைமை தளபதி நரவானே சந்தித்து, பாராட்டு தெரிவித்தார்.latest tamil newsலடாக்கின் கல்வான் பகுதியில், கடந்த, 15ம் தேதி இரவு, இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். 70 வீரர்களுக்கு மேல் காயம் அடைந்தனர். அவர்கள், லே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil newsஇந்நிலையில், லடாக் எல்லை பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ராணுவ தலைமை தளபதி, நரவானே, இரண்டு நாள் பயணமாக சென்றார். அங்கு, மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.சீன ராணுவத்துக்கு எதிராக, தைரியமாக போரிட்டதற்காக, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, லடாக் எல்லையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த நரவானே, சீன ஊடுருவலை தடுக்க, கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த வேண்டும் என, கேட்டு கொண்டார். சீன ராணுவம் ஊடுருவ முயற்சித்தால், அதற்கு பதிலடி கொடுக்கவும், ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bharathan - Vaniyambadi,Vellore,இந்தியா
24-ஜூன்-202013:37:47 IST Report Abuse
R Bharathan You should mention him designation only
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
24-ஜூன்-202012:20:54 IST Report Abuse
vnatarajan வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் ஜில்லா மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இரண்டு மூன்று நான்கு சக்ரவாகனங்களை வைத்திருந்தால் அதில் அந்தந்த ஜில்லா வீரர்களின் புகை படத்தை ஓட்டிச்செல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் இறந்த உங்கள் மண்ணின் வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கும் மரியாதையாகும். ஏன் சினிமா நச்சத்திரங்களுக்கு கொடுக்கும் மரியாதையை நம் நாட்டையும் நம்மையும் காக்கின்ற இவர்களுக்கு கொடுக்கக்கூடாது. கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்களேன்.
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202011:25:03 IST Report Abuse
bigu இவர் என்ன பாராட்டு என்கிறார். காயம் அடைந்ததை நினைத்து வருத்தபடுங்கள்
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
24-ஜூன்-202014:17:00 IST Report Abuse
RajanRajanராணுவ வீரர்களுக்கு காயங்களும் உயிர் தியாகமும் பெருமை கொண்டாடும் பரம்பரை சொத்து. இழப்பு என்பது இந்த வீரம் சார்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இதன் மகிமையை புரிந்து கொள்ள எல்லோராலும் இயலாது அன்பரே. vaalthukal....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X