தொற்றுடன் பஸ்சில் பயணித்த முதியவருக்கு சிதம்பரத்தில் சிகிச்சை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்றுடன் பஸ்சில் பயணித்த முதியவருக்கு சிதம்பரத்தில் சிகிச்சை

Added : ஜூன் 24, 2020
Share
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பஸ்சில் பயணம் செய்த கொரோனா பாதித்த முதியவர், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவிக்கு பரிசோதனை முடிவு வராததால், வீட்டு தனிமையில் உள்ளார். கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம் தென்குத்து பகுதியைச்சேர்ந்த 57 வயது முதியவர் கடலுார் காசநோய் தடுப்பு பிரிவு மருத்துவமனையில் காச நோய்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பஸ்சில் பயணம் செய்த கொரோனா பாதித்த முதியவர், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவிக்கு பரிசோதனை முடிவு வராததால், வீட்டு தனிமையில் உள்ளார்.

கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம் தென்குத்து பகுதியைச்சேர்ந்த 57 வயது முதியவர் கடலுார் காசநோய் தடுப்பு பிரிவு மருத்துவமனையில் காச நோய் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரது மனைவி உடனிருந்தார்.இந்நிலையில் இவர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். முடிவு வெளி வருவதற்குள் காசநோயாளியை டாக்டர்கள் வீட்டிற்கு அனுப்பினர். நேற்று முன்தினம், கடலுாரில் இருந்து பண்ருட்டி வந்தனர். அங்கிருந்து டவுன் பஸ்சில் வடலுாருக்கு சென்றனர்.

பின் பண்ருட்டி - வட லுார் பஸ்சில் மனைவியுடன் காடாம்புலியூர் அருகே சென்ற போது குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி கள் பேசுவதாக கூறி மொபைல்போனில் அழைப்பு வந்தது.பஸ்சில் செல்வதாக முதியவர் கூறியதை அடுத்து சுகாதாரத் துறை அதிகாரி, மொபைல்போனை கண்டக்டரிடம் கொடுக்குமாறு கூறினார்.கண்டக்டரிடம் பேசிய அதிகாரி முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவலை தெரிவித்தார். இதை அறிந்த பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் 57 வயது முதியவர், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவிக்கு பரிசோதனை முடிவு இன்னும் வராததால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ குழுவினர் அறிவுரை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X